என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நிவின் பாலி
நீங்கள் தேடியது "நிவின் பாலி"
தொடர் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட வேண்டி நடிகர் நிவின் பாலி உருக்கமான அறிக்கை வெளியிட்டுள்ளார். #KeralaFloods #NivinPauly
கேரள மாநிலத்தில் இதுவரை காணாத அளவுக்கு பலத்தமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை மற்றும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. வரலாறு காணாத இந்த இயற்கை சீற்றத்துக்கு இதுவரை 346 பேர் உயிரிழந்துள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். கேரள மக்களுக்கு இந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு அமைப்புகளும், பொதுசேவை நிறுவனங்களும், தமிழ் திரையுலகினரும் உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்த நிலையில், கேரள மக்களுக்கு உதவும்படி நடிகர் நிவின் பாலி உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,
" "கடவுளின் தேசம்" எனப்படும் கேரளாவில் பிறந்து வளர்ந்தவன் என்பதிலும், கேரளா "இந்தியா" என்கிற மாபெரும் தேசத்தின் ஒரு பகுதி என்பதில் மிக மிக பெருமை கொண்டிருந்தேன், என்றும் பெருமைபட்டு கொண்டே இருப்பேன் என்பதில் ஐயமில்லை.
ஆனால் இன்று, எங்களது அழகிய கேரளா வெள்ளத்தாலும், நிலச்சரிவினாலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்காணோர் உயிரிழந்துள்ளனர். எண்ணற்ற மக்கள் தங்கள் உடமைகளை இழந்து வீடு, உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி தவிக்கின்றனர். என் மாநில மக்கள் நிலைமை என் மனதை பிசைகிறது. இந்த நேரத்திலும் ஒரு நம்பிக்கை கீற்றாய் என் மனதில் ஒளி பாய்ச்சுவது என் தேசத்தின் ஒற்றுமை தான்.
வேற்றுமையிலும் ஒற்றுமை என்கிற தத்துவத்தில் நம்பிக்கை உள்ள, என் தேசத்து மக்கள் என் மாநிலத்தையும், என் மாநில மக்களையும் கைவிட மாட்டார்கள் என நம்புகிறேன். இந்த வரலாறு காணாத வீழ்ச்சியில் இருந்து வீறுகொண்டு எழுந்து மீண்டும் கேரளா ராஜநடை போடும் என்பதில் ஐயமே இல்லை. ஆனால் உடனடியான தேவைகள் அவசியம் என்பதால் தான் இந்த கோரிக்கை.
உங்களால் முடிந்த அளவுக்கு அத்தியாவய பொருட்களை உடனடியாக கேரளா மக்களுக்கு அனுப்புங்கள். யார் மூலமாக என்பது முக்கியம் இல்லை, உடனடியாக வந்து சேர வேண்டும் என்பதுதான் ஒரே நோக்கம். "கடவுளின் தேசத்தை மனித நேயம் மீட்டு கொடுக்கும்" என்கிற நம்பிக்கையில் நான் உள்ளேன். நம்புகிறேன். பிராத்திக்கிறேன். கை கூப்பி வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார். #KeralaFloods #KeralaFloodRelief #KeralaRain #NivinPauly
நிவின் பாலி நடிப்பில் தற்போது உருவாகி வரும் ‘காயம்குளம் கொச்சூன்னி’ படத்தில் பிரபல வசனகர்த்தாவும், பாடலாசிரியரும் இணைந்திருக்கிறார். #NivinPauly
நிவின் பாலி நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘காயம்குளம் கொச்சூன்னி’. இவருடன் இப்படத்தில் பிரியா ஆனந்த், பிரியங்கா திம்மேஷ், சன்னி வேன், பாபு ஆண்டனி மற்றும் இன்னும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்தில் மோகன்லால் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார்.
தற்போது இப்படத்திற்கு வசனம் மற்றும் பாடல்களை எழுதி வருகிறார் மதன் கார்க்கி. 1800 ஆம் ஆண்டுகளின் பின்னணியில் அமைந்திருக்கும் இந்த படம், ராபின்ஹூட் போன்ற கதாபாத்திரத்தை சுற்றி அமைந்துள்ளது.
நேரடி மற்றும் புத்தம் புதிய ஸ்கிரிப்ட்க்கு வசனம் எழுதுவதே ஒரு கடினமான பணியாக இருக்கும்போது, அதுவும் டப்பிங் பதிப்புகளுக்கு எழுதுவது எப்படி இருக்கும். இந்த வகையில், மதன் கார்க்கி பாகுபலி படங்களுக்கும், சமீபத்திய கிளாசிக்கல் ஹிட்டான 'நடிகையர் திலகம்' படத்துக்கும் வசனம் எழுதியது ஒரு மகத்தான, தனித்துவமான சாதனை. இதன் மூலம், மதன் கார்க்கி மற்ற பிராந்திய மொழிகளில் உருவாகும் சரித்திர படங்களுக்கு, அதன் சாரம் மாறாமல் தமிழுக்கு வசனம் எழுதும் ஒரு 'நுழைவாயில்' ஆனார் மதன் கார்க்கி.
இவர்கள் கூட்டணியில் உருவாகும் இந்த படத்திற்கு தற்காலிக தலைப்பாக 'மலைக்கள்ளன்' என்ற தலைப்பை வைத்திருக்கிறார்கள். விரைவில் அதிகாரப்பூர்வ தலைப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X